‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கியது

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால்,  இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டர் சுரேஷ் அர்ஸ், கலை இயக்குனர் முத்துராஜ், பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, விவேக் ஆகியோருடன் கே.கருணாமூர்த்தி, ஏ.எம்.ரத்னம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.