10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  “தமிழரசன்”. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி, அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன்,  முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..

ஒளிப்பதிவு –  ஆர்.டி.ராஜசேகர்

இசை  –   இளையராஜா

பாடல்கள்  –  பழனிபாரதி, ஜெய்ராம்

கலை  –   மிலன்

ஸ்டண்ட்  –   அனல் அரசு

எடிட்டிங்   –   புவன் சந்திரசேகர்

நடனம்   –      பிருந்தா, சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை   –     ராஜா ஸ்ரீதர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –   பாபு யோகேஸ்வரன்

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்றது…இரண்டு கட்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்தது. அதிரடி ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது..

இந்த படத்திற்காக ஜெயராம் எழுதிய

“பொறுத்தது போதும்

 பொங்கிட வேணும்

புயலென வா ” என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவானது.

2009-ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த தமிழரசன் படத்தில் பாடியது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை என்கிறது படக்குழு.

 ஜேசுதாஸுக்கு பூங்கொத்து கொடுத்து இளையராஜா, இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் ஜி.சிவா ஆகியோர்  வரவேற்றனர்..

படத்தில் விஜய் ஆண்டனி பாடும் புரட்சிகரமான பாடலாக இது ஒலிக்கப் போகிறது.

 

Read previous post:
0a1a
Actress Nazmaa Sultana

Dubai Based Happening Model & Entrepreneur @NazmaaSultana #nazmaa_sultana94 debuts in Kollywood & Tollywood Best wishes for big success @kavithasachi @camsenthil

Close