தமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”!

பெரும்பாலான தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களின் ரஜினிக் கிறுக்கு மிகவும் எரிச்சலூட்டுகிறது. அந்த ஆள் எதையாவது உளறினால், இவர்கள் உடனே ஆகாயத்துக்கும், பூமிக்குமாக குதிக்கிறார்கள். தில்லியிலிருந்து தூண்டிவிடப்படுகிற இந்த அலப்பறை, தமிழர்களை கோடம்பாக்கத்து அடிமைகளாகவே வைத்திருக்கச் செய்யப்படும் ஒரு சதிதான்!

அமிதாப் பச்சன் ஏதாவது சொன்னால் இந்தி ஊடகங்கள் இப்படி குதிப்பதில்லையே? ஹாலிவுட் கதாநாயகர்கள் கூரைமீது ஏறி நின்று கூவினாலும், அமெரிக்க ஊடகங்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லையே? இங்கே மட்டும் ஏன் இந்த அவலம்? ரஜினி ஏதாவது அறிவுபூர்வமாக சொல்லித் தொலைத்தாலும் பரவாயில்லை.

இன்று மதியம் நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் ஓர் ஊடகத் தோழர் ரஜினி பற்றிய விவாதம் ஒன்றில் பங்கேற்க என்னை அழைத்தார். அந்த நடிகரைப் பற்றிப் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பாத நான், பணிவுடன் மறுத்துவிட்டேன். இந்த ரஜினிக் கிறுக்கில் நானும் ஏன் பங்கேற்க வேண்டும்?

பொறுப்புணர்வுள்ள தமிழகத் தலைவர்கள் அனைத்து ஊடகப் பொறுப்பாளர்களையும் நேரில் சந்தித்து, இந்த தமிழர்-விரோத வேலையை இனியும் தொடராதீர்கள் என்று கோரிக்கை வைக்க வேண்டும். யாரும் இதனைச் செய்யவில்லை என்றால் நானும், சில தோழர்களும் உறுதியாகச் செய்வோம். So sick of this Rajini fixation!

சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்,
நவ. 8, 2019.

Read previous post:
0a1a
பாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்!

சென்னையில் இன்று தனது வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”திருவள்ளுவர் போன்ற ஞானிகள் மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர், கடவுள் நம்பிக்கை

Close