பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யா – ஜோதிகா ரூ.1 கோடி நிதியுதவி

சூர்யா நடிப்பில், 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா & ஜோதிகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (02-11-2021) அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சித்தரிக்கும் இந்த படத்தை நேற்று (அக்டோபர் 31) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டியது படக்குழு.

முதலமைச்சர் படக்குழுவினருக்குத் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் முன்னிலையில் பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக, சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது  தயாரிப்பு நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினர். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டார்கள்.