“ப்ரிவியூ காட்சிகளையும் கூட்டணிகள் தீர்மானிக்கின்றன!” – இயக்குநர் சீனு ராமசாமி

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக தமன்னா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வடிவுக்கரசி, வசுந்தரா, ஷாஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், ”ப்ரிவியூ காட்சிகளையும் கூட்டணிகள் தீர்மானிக்கின்றன” என இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.

“என் எல்லாப் படங்களையும் சர்வகட்சித் தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியாகத் திரையிடல் செய்வதுண்டு. இம்முறை உதயநிதி, தமன்னா நடிப்பில் வரும் 22-ம் தேதி வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்துக்கு அவ்வாய்ப்பில்லை. கூட்டணிகள் தீர்மானிக்கின்றன, ப்ரிவியூ காட்சிகளையும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.

#

 

Read previous post:
0a1a
அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக்கின் புதிய பெயர் ‘ஆதித்யா வர்மா’

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் பாலா

Close