அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக்கின் புதிய பெயர் ‘ஆதித்யா வர்மா’

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் பாலா இயக்கத்தில் ‘வர்மா’ என்ற பெயரில் படப்பிடிப்பு தொடங்கியது. துருவ் விக்ரம், மேகா, ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தின் இறுதிப் பிரதியைப் பார்த்த தயாரிப்பாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

மேலும், துருவ் விக்ரமை தவிர இதர நடிகர்கள் அனைவரும் மாற்றப்பட்டு மறுபடியும் ‘அர்ஜுன் ரெட்டி’ உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மீண்டும் ரீமேக் படப்பிடிப்புக்காக இயக்குநர், நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டது படக்குழு. இதில் துருவ் விக்ரமுக்கு நாயகியாக பனிடா சாந்து ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் இந்தியில் வருண் தவான் நடித்த ‘அக்டோபர்’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரீமேக் படப்பிடிப்பை ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரியவுள்ளனர்.

‘ஆதித்யா வர்மா’ என்று தற்போது பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடித்து, விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Read previous post:
0a1a
டு லெட் – விமர்சனம்

கடந்த முப்பது வருடங்களில் தமிழில் வந்திருக்கும் மிகச் சிறந்த சினிமா - டுலெட். சினிமா ஒரு விஷூவல் ஆர்ட் என்பதை முழுமையாக உணர்ந்த, அறிந்த கலைஞனிடமிருந்து வந்திருக்கும்

Close