ஆர்.கே.நகரில் சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்,  அதிமுக அவைத்தலைவரும், அமைச்சருமான செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடையே பேசிய செங்கோட்டையன், ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக டிடிவி.தினகரனை ஆட்சிமன்ற குழு கூடி ஒருமனதாக தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், “ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதற்காக, ஆட்சிமன்ற குழுவுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளராக போட்டியிடவுள்ளேன். இந்தத் தேர்தலில் மட்டுமல்ல இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே.

ஆர்.கே.நகர் தேர்தலில் நிச்சயமாக மக்கள் பேராதரவோடு அதிமுக வெற்றி பெறும். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

வருகின்ற 23ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்கிறேன். ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக மட்டுமே அதிமுகவுக்கு போட்டி. ஓபிஎஸ் அணி ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பின்னர் முடங்கிப் போய்விடும்” என்றார் டிடிவி.தினகரன்.

 

Read previous post:
0a1
‘Padmavati’ movie set torched by fringe activists in Kolhapur

The Kolhapur set of Sanjay Leela Bhansali’s Padmavati was vandalised and set on fire on Tuesday night. Around 40 to 50 people

Close