பார்ப்பன கொண்டையை மறைக்க மறந்த கமல்ஹாசன்!

நேற்றைய தொலைக்காட்சி விவாதத்தில் கமல்ஹாசன் பல விசயங்களை பேசினார். அதில் அனைவரும் individual ahimsa-வில் ஈடுபட வேண்டும் என்றார். இதற்கு காந்தி, திலகர், சாவர்க்கர் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசினார்.

இதில் காந்தியை விட்டுவிடுவோம்…சரி, திலகரையும் சாவர்க்கரையும் மேற்கோள் காட்டி பேசினாரே, அவர்கள் என்ன செய்தனர்….?

திலகர் ஆங்கிலேயரை விரட்டுவதற்காக வினாயகர் சதுர்த்தி நடத்தியதாக பாட புத்தகங்களில் போடப்பட்டிருக்கும். உண்மையில் அவர் அதற்காகத் தான் நடத்தினாரா…?

19ஆம் நூற்றாண்டில் பார்ப்பனரல்லாதோர் நலனுக்காக sathya sodhak movement என்ற அமைப்பை உருவாக்கி, இளைஞர்களிடையே எழுச்சியையும், இந்து மத புரட்டுகளுக்கும் தீண்டாமை கொடுமைகளுக்கும் எதிராக நின்றவர் பூலே. இவருக்கு எதிராக இந்துத்துவத்தை பரப்பவே அப்போது திலகர் இந்த சதுர்த்தியை நடத்தினார்.

முஸ்லீம்களின் மொகரம் பண்டிகைக்கு இணையாக தாங்களும் ஊர்வலம் நடத்த வேண்டும் என நடத்திக் காட்டினார். வினாயகர் சதுர்த்திக்கு இணையாக சிவாஜி ஜெயந்தியையும் கருதினார்.

19ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற மாநாட்டில் தீண்டாமைக்கு எதிராகவும் பார்ப்பனருக்கு சமமானவர்கள் மற்ற மூன்று வர்ணத்தார் என்றும் பேசினார். அந்த பேச்சில் மயங்கி 250 பேர் தீண்டாமைக்கு எதிராக கையெழுத்திட்டனர். இதில் திலகர் மட்டும் முக்காடு போட்டுக்கொண்டு ஓடிவிட்டார். இதே ஆண்டு கலப்பு திருமணத்துக்கு எதிராக பேசி தனது பார்ப்பனிய முகத்தை வெளிக்காட்டியவரே இந்த திலகர்.

சரி, சாவர்க்கர் எப்படிபட்டவர்..?

காந்தியாரை கொலை செய்த கோட்சே இருந்த இயக்கத்தின் தலைவராக இருந்த, பார்ப்பனர்களால் வீரர் என போற்றப்படுகிற சாவர்க்கர், ஆங்கிலேயர் ஆட்சியில் 5 முறை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து மண்டியிடும் அளவுக்கு வீரம் பொருந்தியவர்.

தமிழ்நாட்டில் இருக்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என காமராசரை மிரட்டியவர் தான் இந்த தியாகி சாவர்கர்…

திரு பூணூல்ஹாசன் இவர்களை மேற்கோள் காட்டியது இவர்கள் சொல்லும் இந்த வழியில் நடக்க தானா..?

தன்னை பகுத்தறிவாளன் என்று கூறிக்கொண்டு அடிபட்ட ஆட்டின் இரத்தத்தை சுவைக்கும் நரியை போல தமிழர்களின் இரத்தத்தை தனது பூணூலுக்கு சாயமேற்றும் வேலையை செய்து கொண்டிருக்கும் இந்த பகுத்தறிவு பார்ப்பானை தோலுரித்துக் காட்டியாக வேண்டும். பெரியாரின் கைத்தடியை கொண்டு தமிழர்களின் மீதான பார்பனிய படையெடுப்பை முறியடிப்பதே நமது முதல் பணி..

இராவணன், மே 17 இயக்கம்

# # #

கமலஹாசன கம்யூனிஸ்டுன்னு நம்பி நம்ம ஊருல ஒரு குரூப்பு சுத்திட்டு இருந்துச்சு..

அவரு கடைசில சாவர்க்கர் சத்தியாகிரஹி’ன்னு அம்புட்டு பய மண்டைலயும் மொளகாய அரைச்சுட்டு போய்ட்டாரு..

திருந்துங்கடா…

ARUN KALAIRAJA