குடும்பத்துடன் ‘தர்மதுரை’ பார்த்தார் ராமதாஸ் – படங்கள்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ படம் வருகிற 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், அவரது மாமனாரும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமி மற்றும் இவர்களின் குடும்பத்தினருக்காக படக்குழுவினர் பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தனர்.

படத்தை பார்த்த பின்னர் இவர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்,  நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனுராமசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.

0a7a

0a7b

0a7c

0a7d