ரஜினியின் “ஆன்மிக அரசியலில்” மதச் சார்பின்மைக்கு இடம் இல்லை: இதோ வீடியோ ஆதாரம்!

தேர்தலரசியலில் குதிப்பது உறுதி என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் ‘ஆன்மிக அரசியல்’ என்று பிரகடனம் செய்துள்ளார்.

ஆன்மிக அரசியல் என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று புரியாமல் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில், ஆன்மிகம் என்பது வேறு; அரசியல் என்பது வேறு. ஆன்மிகம் என்பது தனிமனிதன் சார்ந்தது; அரசியல் என்பது சமூகத்தை நிர்வகிப்பதற்கானது. எனில், இவர் சொல்லும் ‘ஆன்மிக அரசியல்’ தான் என்ன?

இது குறித்து செய்தியாளர்கள் இன்று (2ஆம் தேதி) கேட்டதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “ஆன்மிக அரசியல் என்றால் உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதி மதச் சார்பற்ற, அறவழி அரசியல். ஆன்மிகம் என்பது ஆத்மாவோடு தொடர்புடையது” என்று தெரிவித்தார்.

ஆனால், அவர் தனது ஆன்மிக அரசியல், மதச்சார்பற்றது என பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் என்ற உண்மையை, நேற்று புத்தாண்டு தினத்தில் நடந்த ஒரு சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது.

புத்தாண்டு தினமான நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்துக்கு சென்ற ரஜினி, சுமார் ஒரு மணி நேரம் அங்கு இருந்தார். முதலில் கோயிலில் தியானம் மேற்கொண்ட ரஜினி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கவுதமானந்தர், மேலாளர் விமூர்த்தானந்தர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது ஒரு காவி சாமியார், “அரசியலில் ஆன்மிகம் இருக்கணும் என்று ரஜினி ஓப்பனாக சொல்லியிருக்கிறார். ‘ஸோகால்டு செக்குலரிசம்’ (மதச்சார்பின்மை) இல்லை” என்று மடத்தலைவரிடம் எடுத்துக்கூறி கெக்கே பிக்கே என்று சிரித்தார். அதை ஆமோதிப்பதைப் போல் ரஜினியும் புன்னகைத்தபடி அமர்ந்திருந்தார்.

இதற்கு ஆதாரமாக வைரலாக பரவிவரும் வீடியோ இதோ:

 

Read previous post:
0a1a
களவாடிய பொழுதுகள் – விமர்சனம்

‘எவனோ எழுதிய கதையை எவனெவனோ உல்டா பண்ணி படம் எடுக்கிறான். அப்படியிருக்கும்போது, நாம் எழுதிய ‘அழகி’ வெற்றிப் படக்கதையை நாமே உல்டா பண்ணி புதுப்படம் எடுத்தால் என்ன?’

Close