“எங்கள் தலைமுறையின் ‘நடிகர் திலகம்’ ‘செவாலியர்’ கமல்”: ரஜினி பாராட்டு!

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் கமலின் சிறந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த உயரிய விருதை பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமா நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியர் விருது பெறும் ஒரே நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. செவாலியர் விருதுக்கு தேர்வான கமல்ஹாசனுக்கு திரைத்துறையை சார்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சக நடிகரும், கமலின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்த், செவாலியர் விருதுக்கு தேர்வான கமலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.