ரஜினிகாந்த் ரத்த நாளத்தில் பாதிப்பு: மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை

சமீபத்தில் டில்லிக்குச் சென்று தனது வாழ்நாள் சாதனைக்காக ஒன்றிய அரசின் உயரிய திரைத்துறை விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றுத் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் முழு உடல்பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில், காவேரி மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வமாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் என்றும், ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு அடுத்த வாரம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read previous post:
0a1b
’ஜெய் பீம்’ படத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் துணிச்சல் மிக்க வழக்கறிஞராக நடித்தது பற்றி சூர்யா விளக்கம்

ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று

Close