நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிகளுக்கும் ஹாசினி களுக்கும் கிடைக்குமா?

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா (ஜோதி சிங்) கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். இதன் மூலம் நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டதாக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமையைப் போல் பல மடங்கு அதிக கொடூர கொடுமையை அனுபவித்து உயிரிழந்தவர் நந்தினி. அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், சிறுகடம்பூர் கிராமம் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்து வந்த நந்தினி, கடந்த டிசம்பர் மாதம் ஆதிக்க சாதி – மத கிரிமினல்களால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சிதைந்த நிலையில் கிணறுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

நந்தினியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரர்கள், அவரது வயிற்றில் இருந்த கருவை கிழித்து எடுத்து எரித்துள்ளனர். இந்த குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்யவில்லை. பெரும் போராட்டத்திற்குப் பிறகே கைது செய்தது காவல்துறை.

0a

நந்தினி போல தமிழகத்தில் பல தலித் சிறுமிகள், சிறு பிஞ்சுகள் கசக்கி எறியப்பட்டுள்ளனர். சென்னை போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

நிர்பயாவுக்கு கிடைத்துள்ள நீதி, நந்தினிகளுக்கும், ஹாசினிகளுக்கும் கிடைக்குமா?

கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?