‘எமன்’ வசூல் மூன்றே நாளில் ரூ.8கோடி! விஜய் ஆண்டனிக்கு ரஜினி பாராட்டு!
படத்துக்குப் படம் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து, வெற்றி நாயகனாக திகழ்கிறார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி கூட்டு தயாரிப்பில் கடந்த வாரம் வெளிவந்துள்ள ‘எமன்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் ஒரு சாதாரண இளைஞன், சூதுவாது மற்றும் சூழ்ச்சிகள் நிறைந்த தேர்தல் அரசியலில் குதித்து அமைச்சராக உயரும் தமிழரசன் கதாபாத்திரம் மற்றும் அவரது தந்தை கதாபாத்திரம் என இரு வேடங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இப்படம் வெளியான மூன்றே நாட்களில் சுமார் 8 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக திரையுலக வர்த்தக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
‘எமன்’ படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பிரம்மாண்டமான ‘2.0’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் ‘எமன்’ படத்தை அவருடைய வீட்டில் உள்ள தியேட்டரில் பார்த்துள்ளார்.
‘எமன்’ படம் நன்றாக இருப்பதாக கூறி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.