பாலா இயக்கத்தில் ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’: ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

பாலா இயக்கத்தில் ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் பாலா. இதில் யுவன் மற்றும் புதுமுகம் பிரகதி நடிக்கவிருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படம் தொடங்கப்படவில்லை.

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியானது. இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்ச் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. ஜி.வி.பிரகாஷ் – ஜோதிகா இருவரையும் வைத்து போட்டோ ஷூட் ஒன்றை முடித்தார் பாலா.

‘நாச்சியார்’  எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சூர்யா. இப்போஸ்டர்களுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

0a

 

Read previous post:
y8
‘எமன்’ வசூல் மூன்றே நாளில் ரூ.8கோடி! விஜய் ஆண்டனிக்கு ரஜினி பாராட்டு!

படத்துக்குப் படம் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து, வெற்றி நாயகனாக திகழ்கிறார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ்

Close