‘கபாலி’யை பார்த்து மகிழ்ந்த ரஜினி இயக்குனர் ரஞ்சித்துக்கு முத்தங்கள் அனுப்பினார்!

மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினிகாந்தின் ‘கபாலி’ திரைப்படம் நாளை (22ஆம் தேதி) திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு, அமெரிக்காவில் அங்குள்ள வினியோகஸ்தர்களுக்காக முன்கூட்டியே இப்படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது.

இச்சிறப்புத் திரையிடலுக்கு ரஜினிகாந்தும் வந்திருந்து, வினியோகஸ்தர்களோடு சேர்ந்து ‘கபாலி’ படத்தை ரசித்துப் பார்த்து மகிழ்ந்தார்.

படம் முடிந்த பின்னர் ரஜினி மிகுந்த உற்சாகத்துடன் பாராட்டும் விதமாக, இதன் இயக்குனர் ரஞ்சித்துக்கு ஏராளமான அன்பு முத்தங்களை அனுப்பியிருக்கிறார். இதனை ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அது:-

Magizhchi!!superstar send neriya kisses

— pa.ranjith (@beemji) July 20, 2016

0a4i