ரஜினியின் புதிய படத்தின் தலைப்பு ‘கரிகாலன்’; சுருக்கமாய் ‘காலா’!

தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதிய படத்துக்கு ‘காலா’ என தலைப்பும், ‘கரிகாலன்’ என துணைத் தலைப்பும் சூட்டப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கபாலி’ வெற்றிப்படத்தை அடுத்து ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ இரண்டாம் பாகமான ‘2.0’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் முடிந்துவிட்டதால், இதையடுத்து அவர் தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

‘கபாலி’ இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ஆம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. மும்பை நிழலுகத்தை கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஹூமா குரோஷியும், முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ரஜினியின் 164-வது படமான இப்படத்தின் தலைப்பு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று இதன் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு ‘காலா’ என தலைப்பும், ‘கரிகாலன்’ என துணைத் தலைப்பும் சூட்டப்பட்டுள்ளது.

 

Read previous post:
r9
Rajavin Paarvai Raniyin Pakkam Audio Launch Photo Gallery

Rajavin Paarvai Raniyin Pakkam Movie Audio Launch

Close