ரஜினியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஐஸ்வர்யா, சௌந்தர்யா தீவிரம்!

ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியை அவரது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்ட குடும்பத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க, அவரது குடும்பத்தினர் நீண்ட நாட்களாகவே முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது ‘கபாலி’ படத்தின் மாபெரும் வெற்றியால், அந்த முயற்சியை அவர்கள் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த தகவலை ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ரஜினியின் மூத்த மக்ளும் இயக்குனருமான ஐஸ்வர்யா, ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக எழுதிவருவதாகவும் சௌந்தர்யா கூறியுள்ளார்.

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து, தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ள ரஜினியின் வாழ்க்கை பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் என்பதால் அதை படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.