பெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்!

பெண்கள் குறித்து பொதுமேடைகளில் கேலியும் கிண்டலுமாக இழிவாகப் பேசுவதில் பெயர் பெற்றவர் பிரபல நடிகர் ராதாரவி. திமுக.வில் இருந்த அவர், நடிகை நயன்தாரா குறித்து ஆட்சேபிக்கத் தக்க வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள தற்கால அதிமுக.வில் இணைந்தார்.

பின்னர் என்ன பேரம் பேசப்பட்டதோ தெரியவில்லை… இன்று சென்னை வந்த பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் ராதாரவி பாஜக.வில் இணைந்தார்.

திக.வில் இணைந்து தன் வாழ்நாள் முழுவதும் பெரியாரின் சீடராக பரப்புரை செய்தவர் நடிகர் எம்.ஆர்.ராதா என்பதும், துரதிர்ஷ்டவசமாக அவரது மகன் தான் இன்று தீவிர இந்துத்துவக் கட்சியான பா.ஜ.க.வில் இணைந்துள்ள ராதாரவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read previous post:
0a1a
ஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்!

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில், கும்லா மாவட்டத்தில் உள்ள காக்ரா- காத்கோத்வா நகரங்களுக்கு இடையே விஷ்னுபூர் எனும்

Close