ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திருமா அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு விசிக ஆதரவளிக்கும்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொலைபேசி மற்றும் கடிதம் வாயிலாக எங்களிடம் ஆதரவு அளிக்கும்படி கோரியதை அடுத்து, திமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் மட்டுமின்றி மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேர்தலில் செயல்பட வேண்டும்” என்றார் திருமாவளவன்.

திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.