மக்கள்நல கூட்டணியுடன் தே.மு.தி.க. கூட்டு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுக்கும், வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் இடையே இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி, வருகிற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தே.மு.தி.க 124 தொகுதிகளிலும், ம்.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் மீதமுள்ள 110 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிறுத்தப்படுவார்.

இன்று காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு காலை 10 மணிக்கு, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் வந்தனர். விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் அவர்களை வரவேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இப்பேச்சுவார்த்தைக்குப்பின் இத்தலைவர்கள் கையெழுத்துடன் வெளியிட்டப்பட்ட அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில், உடன்பாடு பற்றிய மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

0a1h