தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடக்கும் என்று நம்புவோருக்கு பெப்பே…!

தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையை குறை கூறினால் தேசபக்தர்களுக்கு கோபம் வருகிறது.

திருவாரூரிலே டிடிவி வேட்பாளர் எஸ்.காமராஜ். அவருக்குப் பரிசுப் பெட்டகம் சின்னம். இன்னொரு சுயேச்சைக்கு குக்கர். அவர் பெயரும் காமராஜ். இது எப்படி?

பாப்பிரெட்டிப்பட்டியில் டிடிவி வேட்பாளர் டிகே ராஜேந்திரனுக்கு பரிசுப் பெட்டகம். இன்னொரு சுயேச்சைக்கு குக்கர். அவர் பெயரும் ராஜேந்திரன். ஆஹா.

அருரில் டிடிவி வேட்பாளர் ஆர் முருகன். குக்கர் வாங்கிய சுயேச்சை வெறும் முருகன். சபாஷ்.

சாத்துரில் அமமுக வேட்பாளர் எஸ் சி சுப்பிரமணியம். குக்கர் பெற்ற சுயேச்சை வெறும் சுப்பிரமணியம். அப்படிப் போடு.

திமுக வேட்பாளர் இல்லங்களில் ரெய்ட் நடக்கிறது. வாழ்க.

ஆனால் பணம் எங்கு புதைக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழ் நாட்டுக்கே தெரியும்.

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடக்கும் என்று நம்புவோருக்கு பெப்பே.

தராசு ஷ்யாம்