அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள மாணவிகளை வற்புறுத்தும் பேராசிரியை: அதிர்ச்சி ஆடியோ

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ‘தேவாங்கர் கலைக் கல்லூரி’ எனும் தனியார் கல்லூரி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா தேவி. இவர் தன்னிடம் படித்து வரும் 4 மாணவிகளை தொலைபேசியில் அழைத்து, உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறும் இதனால் பணம், சலுகைகள் உள்பட பல்வேறு பயன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

ஆனால், அந்த 4 மாணவிகள் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவர்களை மறைமுகமாக பேராசிரியை மிரட்டியுள்ளார். இந்த நிலையில் பேராசிரியை மாணவிகளிடம் இது குறித்து பேசிய 19 நிமிட ஆடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..

அந்த ஆடியோ: