“கல்வி வியாபாரம் ஆகி, இப்போது விபசாரமாகவும் ஆகி விட்டது!” – ரவிக்குமார்

ஒரு கல்லூரி பேராசிரியை தனது மாணவிகளை தகாத வழிக்கு அழைக்கும் ஆடியோவைக் கேட்டபோது அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

ஒரு மாணவியிடம் ரகசியமாக பேசப்பட்ட உரையாடல் அல்ல, நான்கைந்து மாணவிகளை ஒன்றாக இருக்க வைத்து, ஸ்பீக்கரை ஆன் பண்ணச் சொல்லி எந்தவித பயமோ, தயக்கமோ இல்லாமல் அவர் பேசியிருக்கிறார்.

சாராயம் விற்றவர்களும், ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் கல்வித் தந்தை ஆகும்போது, பிம்ப்கள் பேராசிரியைகள் ஆவதில் வியப்பேதும் இல்லை.

கல்வி வியாபாரம் ஆகிவிட்டது என்று வருந்திக் கொண்டிருந்தோம். அது இப்போது விபச்சாரமாகவும் ஆகிவிட்டது!

# # #

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதத் துறை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு அழைக்கும் தொலைபேசி உரையாடல் நாட்டையே அதிர வைத்திருக்கிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு (MUTA) இந்தப் பிரச்சனையைக் காலந்தாழ்த்தாமல் உடனே கையிலெடுக்க வேண்டும்.

இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்காமல், மாணவிகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

ரவிக்குமார்

மாநில பொதுச்செயலாளர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி