யுவன் ஷங்கர் ராஜா இசையில் பின்னணி பாடகர் ஆனார் விஜய் சேதுபதி!

ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பேய் பசி’. இந்த படத்தை ‘Rise East Entertainment Private Limited’ நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர்   தயாரித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு ஒரு வித்தியாசமான, அனைவரையும் உடனே கவரும் குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிக பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர்.

நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவை தரும் விஜய் சேதுபதி ‘பேய் பசி’ படத்தின் இந்த பாடலிற்காக பின்னணி பாடகராக மாறியுள்ளார். வசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து மிகப் பெரிய வெற்றியை பிடித்திருக்கும் விஜய் சேதுபதி, இந்த கிளப் பாடலை தனது அதே வசீகர பாணியில் பாடி  அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது.

டோனி சான் ஒளிப்பதிவில், ஆடை வடிவமைப்பில் தேசிய விருதை பெற்ற பூர்ணிமா ராமசாமியின் ஆடை வடிவமைப்பில், மோகன் முருகதாஸின் படத்தொகுப்பில்,  மதனின் கலை இயக்கத்தில் ‘பேய் பசி’ உருவாகி வருகிறது.

Read previous post:
0a1c
“நடிகை ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கை துயர் நிறைந்தது!” – இயக்குனர் ராம் கோபால் வர்மா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிறந்து, தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களில் ஒளிர்ந்து, இந்தி படவுலகில் ‘நம்பர் 1’

Close