“இந்த வடநாட்டு கூமுட்டைகள் தான் நமக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்!”

நம்ம கம்பெனில பீகார், ராஜஸ்தான் ஒரிசா, ஆளுக வேலை செய்றாங்க..

மூணு மாசத்துக்கு வேலை பத்துட்டு, அடுத்த மூணு மாசம் ஊருக்கு போயிருவாங்க..

ஒரு செட்டு வந்தா, அதுல வயசு வித்தியாசமெல்லாம் இல்லை. பதினாறு வயசுலேருந்து அறுபது வயசு ஆளு வரைக்கும் வரும். மாசம் ஏழாயிரம் ரூபா சம்பளம். சாப்பாடு போட்றணும்.

மாடு மாதிரி பன்னெண்டு மணி நேரம் வேலை பாத்துட்டு, யானை மாதிரி ரேசன் அரிசிய சோறு வடிச்சு சாப்புடறது; இல்லைனா, கோதுமை ரொட்டி – பருப்பு இதுதான் சாப்பாடு.

சாப்பாடாவது நல்ல சோறு திங்கட்டுமேன்னு சம்பா அரிசி வாங்கிப் போட்டா, ஒருத்தனுக்கும் ஒத்துக்கலை. “வயிறு புடுங்கிட்டு போவுது சேட்டு. எங்களுக்கு ரேசன் அரிசியே வாங்கி குடு”ன்னு பேக் அடிச்சிட்டானுக.

வாரத்துக்கு மூணு நாள் அசைவம் வாங்கி குடுத்துருவேன். அது கோழியா, இல்லை மீன் கறியா – அது அவனுக சாய்ஸ்.
ஆனா, கோழி கறிய விட கோழி காலை அவிச்சுத் திம்பானுக.

இதனால மத்த கம்பெனி முதலாளிகளுக்கெல்லாம் நம்ம மேல காண்டு. “ஏய்யா கறி வாங்கிப்போட்டு பழக்குற? அப்புறம் எங்ககிட்ட உள்ளவனுகளும் அதே மாதிரி கேப்பானுக”ன்னு கோவாச்சுக்குவானுக.

“என்னடா இப்டி திங்கிறீங்க?”ன்னு கேட்டா, “இல்லை சேட்டு, இதுவே எங்களுக்கு பிரியாணி மாதிரி”ன்னு சிரிப்பானுக.

பத்து பேர்ல ஏழு பேரு ரெண்டு, இல்லைனா மூணு கல்யாணம் பண்ணிருப்பானுக. சர்வ சாதாரணமா டைவர்ஸ் பண்ணுவானுக.

“என்னடா போன மாசம் லேட்டு?”ன்னு கேட்டா, “பொண்ணு பாத்துட்டு இருக்கோம் சேட்டு”ன்னு கூச்சப்படுவானுக. “என்னடா ஆச்சு?”ன்னு கேட்டா, “அது சரியில்லை”னு சர்வ சாதாரணமா மொதப் பொண்டாட்டிய கழட்டி விட்ருப்பானுக.

“தமிழ்நாடு சூப்பர்”னு சொல்வானுக. அவனுக ஊர்ல போலிஸுக்கெல்லாம் வேலையே இல்லையாம். ஒவ்வொரு கிராமத்துலயும் பஞ்சாயத்து இருக்குமாம். அவனுக சொல்றது தான் தீர்ப்பு. போலீசு உள்ள வர முடியாது. வந்தா, இவனுக அவனுகளோட சண்டை போட்டு, சுட்டுக்கிட்டு சாகுவானுகளாம். எல்லார் வீட்லயும் துப்பாக்கி இருக்கும்.

“என்னதாண்டா வாழ்றீங்க?”ன்னு கேட்டா, “விவசாயம் இல்லை. எல்லாம் குட்டி குட்டி ஜமீன்தார் கண்ட்ரோல்ல இருக்கு. கூலி வேலைக்கு போனாலும் சோறுதான் மிச்சம்.”

அதாவது, 1940ல இருந்த தமிழ்நாட்டோட நிலைமை. அதாவது, நம்ம கல்யாணம் பண்ணி, பேரன் – பேத்தி பாத்துட்டோம். இவனுக இன்னும் வயசுக்கே வரலை.

உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் பகுத்தறிவில்லா இந்த வடநாட்டு கூமுட்டை மக்கள்தான் நமக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற நிலை இருக்கும் வரை இந்தியா கார்பரேட்டுகளின் கையில் சிக்கி நாசமாய்த் தான் போகும்…

அடேய்… எங்களை விட்ருங்கடா….!

Courtesy: Raja M Raja