ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல் திரைப்படம் ஆகிறது!

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பிரசித்தி பெற்ற நாவல் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’. இந்நாவல் திரைப்படமாக உருவாக உள்ளது.

இதை தயாரித்து இயக்குகிறார் ‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’, ‘நீலம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள வெங்கடேஷ் குமார்.ஜி.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த (ஆகஸ்டு) மாதம் முதல் நடைபெற இருக்கிறது.