சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ்: நவம்பரில் படப்பிடிப்பு?

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் நகைச்சுவைப் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.

இப்படத்துக்கான நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. கதை மற்றும் கதாநாயக பாத்திரத்துக்கு பொருத்தமாக நடிகர் தனுஷ் இருப்பதால், அவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிகிறது.

தற்போது ராஜ்கிரண் நடிக்கும் ‘பவர் பாண்டி’ படத்தை தனுஷ் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறது படக்குழு. நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.