தமிழகத்தை விட்டு வெளியேறுகிறது நியூட்ரினோ திட்டம்!

நியூட்ரினோ திட்டம் தமிழகத்தை விட்டு வெளியேற இருப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இட மாற்றம் குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் வெளியாகவில்லை. அவ்வாறு நியூட்ரினோ திட்டம் தமிழகத்தை விட்டு நகர்வதை ‘பூவுலகின் நண்பர்கள்’ வரவேற்கிறோம்.

அதேவேளை, ஆந்திர மாநிலத்தில் இந்த திட்டம் எந்த வகையில் அமல்படுத்த இருக்கிறது என்ற கவலையும் எங்களுக்கு உள்ளது.

‘பூவுலகின் நண்பர்கள்’ பதிவு செய்த வழக்கின் மூலம் நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். மேலும், புதிய அனுமதி பெறவும் உத்தரவிட்டது. இதன் காரணமாக ஏற்பட்டுவரும் காலதாமதம், மக்கள் போராட்டம், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற எல்லாம் கூட்டாக சேர்ந்து இந்த நகர்வை சாத்தியப்படுத்தி உள்ளது.

‘பூவுலகின் நண்பர்கள்’ நியூட்ரினோ திட்டத்தை இரண்டு முக்கிய அம்சங்களில் எதிர்க்கின்றனர்.

1) நியூட்ரினோ திட்ட கட்டுமானத்திற்காக பல ஆயிரம் கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டு பல டன் பாறைகள் உடைக்கப்பட இருக்கும் முறை. இப்படி பாறைகள் வெடிக்கப்படுவதனால் அது சுற்றுச்சூழலுக்கு உண்டாக்கும் பாதிப்புகள் பற்றி ஆய்வுகள் இல்லாது இருப்பது.

2) நியூட்ரினோ திட்டத்தின் இரண்டாம் கட்ட ஆய்வுகள். இந்திய நியூட்ரினோ ஆய்வு திட்ட அறிக்கையில் (Detailed Project Report) இரண்டாம் கட்ட சோதனை என்பது செயற்கை நியூட்ரினோ கதிர்களை ஆய்வு செய்வதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் கட்ட ஆய்வுகள் அமெரிக்கச் சார்பாக உள்ளது என்பது நமது குற்றச்சாட்டு. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உள்ள Higher Physics ஆய்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்திய நியூட்ரினோ ஆய்வு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ குறித்த இந்திய – அமெரிக்க கூட்டு ஆய்வுகளுக்கான தகவல்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான Fermi Lab வெளியிட்டுள்ளது.

நியூட்ரினோ கதிர்களை பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு செலுத்தி அணுஆயுதங்களை கண்டறிவது அல்லது அதை வெடிக்கச் செய்வதற்கான ஆய்வுகள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியைத் தாண்டி நியூட்ரினோ கதிர்களை ஆயுதமாக மாற்றும் ஆய்வுகளும் நடந்து வருகிறது.

இந்திய நியூட்ரினோ ஆய்வு திட்டம் இத்தகைய செயலுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆக, தமிழகத்தில் மட்டுமல்ல, ஆயுத தயாரிப்பு நோக்கோடு கொண்டு வரப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை இந்தியாவின் எங்கு அமைத்தாலும் எதிர்க்க வேண்டியது நமது கடமை.

VETRISELVAN MUTHURAJ

(Shared from SUNDAR RAJAN)

                # # #

         Neutrino slipping out as Andhra beckons

By S V Krishna Chaitanya  |  Express News Service  |   Published: 15th June 2017 01:07 AM  |  Last Updated: 15th June 2017 05:42 AM

CHENNAI: With the Tamil Nadu government showing no urgency and National Green Tribunal suspending the environmental clearance, the India-based Neutrino Observatory (INO) project is looking for a new ally. In all likelihood, Tamil Nadu will lose out to neighbouring Andhra Pradesh, where a new site is being explored as a possible alternative.

INO project director Vivek Datar confirmed to Express that hunt for alternative sites has begun. “We can’t wait for ever. We waited for close to four long years to get approvals and tried convincing people about the national significance of the project and importantly doing it on time. But, there is no response from the government. On the other hand, the Andhra Pradesh government is very welcoming. So, we are weighing our options,” he said and reserved the names of the alternative sites.

However, sources said a site selection committee has been formed and two sites are under consideration of which Kothapalem village in Visakhapatnam district is emerging as the preferred location as it offers requisite geophysical characteristics needed to construct a giant 50,000 tonne magnetic Iron Calorimeter (ICAL) to study neutrino oscillations produced by cosmic rays in the earth’s atmosphere.

Since the laboratory cavern needs to be more than 1000m underground, the choice of site is primarily dictated by the rock quality. South Indian mountains have the most compact, dense rock and are oldest rocks found in India, while the Himalayas are mostly metamorphic sedimentary rock. Bodi Hills in Theni district has Charnockite, which is the hardest rock known.

Vivek Datar said the mountains of Tamil Nadu are best suited, offering stable dense compact rocks with maximum safety to locate such a laboratory, but unfortunately the indecision on by the State government is forcing us to move out. He also said the INO was complying with the NGT orders.