“மரகத நாணயம்’ திரைக்கதையை அனைவரும் பாராட்டு வார்கள்!” – ஆதி

சிறப்பாக உருவாக்கப்பட்ட எந்த ஒரு சாகச, கற்பனை திரைப்படமும் மொழி, கலாச்சாரம் மற்றும் காலம் கடந்தும் மக்களால் வரவேற்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். அந்த மாதிரி ஒரு சாகசம் மற்றும் காமெடி கலந்த கற்பனைத் திரைப்படம் தான் ‘மரகத நாணயம்’.

ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், டேனியல், ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ் என திறமையான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளடக்கியுள்ள இந்த படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கியிருக்கிறார்.

இப்படம் குறித்து இதன் நாயகன் ஆதி கூறுகையில், “இந்த மரகத நாணயம் எல்லா தரப்பு ரசிகர்களுக்காகவும் எடுக்கப்பட்ட படம். 5 வயது குழந்தைகள் முதல் 75 வயது பெரியவர்கள் வரை ரசிக்க கூடிய படம். ரசிகர்கள் இந்த படத்தை விரும்பி ரசிப்பதோடு, இதன் கதை மற்றும் திரைக்கதையையும் பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். வணிக வட்டாரத்தில் நல்ல வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுள்ள இந்த ஃபேண்டஸி படத்தில் காமெடி முக்கிய பங்கு வகிக்கும். மொத்த படக்குழுவும் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரமாக இருக்கிறோம். மரகத நாணயம் ஜூன் 16ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருப்பதால் மொத்த குழுவும் உற்சாகமாகவும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கிறோம்” என தன்னம்பிக்கையோடு கூறுகிறார் படத்தின் நாயகன் ஆதி.

 

Read previous post:
g2
‘பாகுபலி’ போன்ற இன்னொரு பிரமாண்டம் ‘கெளதமி புத்ர சாதகர்ணி’

எதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம். அதற்கு உதாரணம் ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ படங்களின் வசூல் சாதனை. அது மாதிரியான

Close