சிறந்த இசையமைப்பாளர் – ‘தாரை தப்பட்டை’ இளையராஜா? “நோ கமெண்ட்ஸ்!”

தமிழின் சிறந்த திரைப்படமாக ‘விசாரணை’

– சரியான, நியாயமான தேர்வு.

***

சிறந்த இசையமைப்பாளர் – இளையராஜா – தாரை தப்பட்டை

– நோ கமெண்ட்ஸ். ஏதாவது எழுதினால் அவரது பக்த கோடிகள் பாலாவின் படங்களில் வருபவர்களைப் போலவே குரல்வளையை கடிக்க வந்து விடுவார்கள்.

ராஜாவை ஒரு என்னியோ மார்கோன் மாதிரி உபயோகப்படுத்தும் ஆளுமையும் ஸ்கிரிப்ட்டும் உள்ள இயக்குநரும், அதற்கு ராஜா இசைந்து போகும் சூழலும் அமைந்தால் ஒருவேளை கொண்டாடலாம். ராஜா காட்டு யானை மாதிரி. அதனுடைய பலத்தை சரியாக உபயோகப்படுத்தும் அங்குசம் நம்மிடமில்லை.

***

இந்திய அளவில் சிறந்த நடிகர் – அமிதாப்பச்சன் – பிக்கு

– மிக மிக சரியான தேர்வு. ரஜினி, கமல் போன்றவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

***

இந்திய அளவில் சிறந்த படம் – பாகுபலி

– முறையற்ற தேர்வு. தேர்வுக்குழு பெரிதாக சறுக்கிய இடம் இது என்றுதான் என்னளவில் நினைக்கிறேன். பெரிய பட்ஜெட்டில் எடுத்து விட்டால் அதற்கு விருதா? அதுவொரு epic படமாகவும் அமையவில்லை.

****

சிறந்த பாப்புலர் படம் – bajrangi bhaijaan

– சரியான தேர்வு

– சுரேஷ் கண்ணன்