“தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் மிஸ்டர் இல.கணேசன்!”

“நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை” என்பதை மிக சாதாரணமாக சொல்லிவிட்டார் இல.கணேசன்.

நாடு என்பது மாநிலங்களால் உருவானது என்பதும்,மாநிலம் என்பதும் மக்களால் நிரம்பியதும் என்பதும் இல.கணேசனுக்கு புரியவில்லை. தமிழகத்தை இழக்கலாம் என்பது இங்கே வாழும் ஆறு கோடி மக்களையும் இழக்கலாம் என்பதாகும்.

ஒரு மாநிலத்தை குழி தோண்டி புதைக்கலாம் என்று சொல்வதற்கு நாடி நரம்புகளில் ஏதோ ஒரு வெறித்தனம் ஓடிக் கொண்டிருந்தால் மட்டுமே சொல்ல முடியும். இல.கணேசனின் உடம்பில் எந்தவிதமான வெறித்தனம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் அறிவார்கள்.

ஒரு திட்டத்தின் சாதக, பாதக விஷயங்களை விவரித்தும் ஆதரித்தும் பேசுவதற்கு, எதிர்ப்பதற்கு வாய்ப்புகளும் உரிமைகளும் இருக்கிறது. ஒரு திட்டத்திற்காக மாநிலமே சுடுகாடாகப் போனாலும் பராவாயில்லை என்பது எந்த மாதிரியான நியாயம்?

இல.கணேசன் போன்றோர்களுக்கும் ஹிட்லருக்கும் மீசையின் அளவு மட்டுமே மாறுபடுகிறது. மற்றப்படி கொள்கைகள், எண்ணங்கள் ஒன்றே. இன்னும் தமிழக மக்களுக்கு விஷவாயு அறைகள், விஷ ஊசிகள் தயார் செய்வது மட்டுமே நிலுவையில் உள்ளது. அதையும் கூடிய விரைவில் நிறைவேற்ற தயங்க மாட்டார்கள் இல.கணேசன்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தான் நாடு பொருளாதார வளர்ச்சி அடையும் என்பதில்லை. இயற்கை வளங்களை விற்றுதான் மக்களுக்கு சோறு போட வேண்டிய அவசியமில்லை. சில ஆயிரம் கோடி கரன்சி வர்த்தகம் செய்வதற்கு பூமியைப் பிளந்து மலடு செய்ய வேண்டுமென்றால், அப்படிப்பட்ட வர்த்தகம் வேண்டாம். எங்களை தோலுரித்துவிட்டு மேல்சட்டை தருகிறோம் என்பதை நிராகரிக்கிறோம்.

பிறந்த மண் மீது பற்று இல்லாத இல.கணேசன் தேசபக்தி பற்றி பேசுவது மகா அபத்தம். இவரைப் போன்றோர்கள் ஆசியா கண்டம் நலம் பெற இந்தியாவை இழப்பதும் தவறில்லை என்று சொல்வதற்கும் தயங்க மாட்டார்கள். வியாபாரிகளுக்கு ஏஜெண்ட்டாக இருப்பவர்கள் எதை வேண்டுமென்றாலும் தயங்காமல் பேசுவார்கள்.

மிஸ்டர் இல.கணேசன், நீங்கள் தமிழகத்திற்கு ஏதாவது நல்லது செய்வதற்கு முற்பட்டால், மாநிலத்தை விட்டு வெளியேறி விடுங்கள். இந்த மண்ணின் முதல் தீங்கு உங்களைப் போன்றோர்களே!

பொன் கார்த்திக்

 

Read previous post:
0
ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நீல ரிப்பன் அணிந்து வந்த ஹாலிவுட் கலைஞர்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தடை உத்தரவைக் கண்டித்து, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு பல ஹாலிவுட் கலைஞர்கள் தங்கள் உடையில் நீல ரிப்பனை அணிந்து வந்தார்கள்.

Close