இந்த சாதி தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது!

காமராஜரை புனிதப்படுத்தி பல பதிவுகளை சமூக வலைதளங்களில் இந்த தலைமுறையினர் பகிர்கின்றனர். அவரை எளிய மனிதர் என்கின்றனர்.. முதல்வராக இருந்தபோது அதை செய்தார் இதை செய்தார் என்கின்றனர்.. அவர்களே காங்கிரஸை தீண்டத்தகாத கட்சியாக பார்க்கின்றனர். காமராசருக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் பேசுகின்றனர்..அவர் காங்கிரஸ் கட்சிக்கார்ர் என்பதும்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் என்பதும்,காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்தார் என்பதும் இவர்களுக்கெல்லாம் தெரியுமா தெரியாதா..?

காங்கிரஸ் கட்சியின் எதிர்மறை செயல்பாடுகள ஏன் காமராஜரை பாதிக்கவே இல்லை..?

அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது,அவர்களது ஆட்சியில் இலங்கைக்கு கட்சத்தீவு வழங்கப்பட்டது..ஆனால் மாநில முதல்வராக இருந்த கலைஞர் மத்திய அரசின் அந்த முடிவுக்கு எதிராக அப்போதே பெரும் போராட்டங்களை நடத்தினார். இந்த தவறுக்கு காமராஜர் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படுவதில்லை.ஆனால் கலைஞர் மீது முழு குற்றமும் சுமத்தப்படுகிறது.

காமராஜரின் நேர்மறை செயல்கள் மட்டுமே பேசப்படுகின்றன.எதிர்மறை செயல்கள் எதுவும் விவாதமாவதில்லை.மாறாக புனித பிம்பமாக சித்தரிக்கப்படுகிறார்.

காமராஜரை விட ஒப்பீட்டளவில் பார்த்தால் கலைஞர் தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டு செய்த நன்மைகள்,திட்டங்கள் மிக ஏராளம்.
ஆனால் இவரின் நேர்மறை செயல்கள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.. ஆனால் சில எதிர்மறை செயல்கள் மட்டுமே பேசப்படுகிறது ,விவாதமாகிறது.

உண்மையில் இந்த நகைமுரண் உணர்த்தும் செய்திதான் என்ன?

இந்த செயற்கை பிம்பக் கட்டமைப்பின் பின்னணி தான் என்ன?

இந்த சாதிதான் எவ்வளவு சக்தி வாய்ந்தது!

நன்றி: Mahesh Kumar