2 போலீஸ் அதிகாரிகளுக்கு இடையில் நடக்கும் ஈகோ யுத்தம் –‘மொட்ட சிவா கெட்ட சிவா’

பல வெற்றிப் படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம், தற்போது பிரமாண்டமாக தயாரித்துவரும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 88வது படம் இது.

இப்படத்தை உலகம் முழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடுகிறார்.  தமிழகம் முழுவதும் டாக்டர் சிவபாலன் வெளியிடுகிறார்.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.  நயாகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். அஸ்வத் தோஸ் ராணா, வம்ஷி கிருஷ்ணா, சரண்தீப் ஆகியோர் வில்லன் களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் கோவை சரளா, சதீஸ், ஸ்ரீமன், தம்பி ராமய்யா, மனோபாலா, நான் கடவுள் ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ், தேவதர்ஷினி, சுகன்யா, சாம்ஸ், மயில்சாமி, மகாநதி சங்கர், கும்கி அஸ்வின், பாண்டு, மதன்பாப், காக்கா முட்டை ரமேஷ், வைஷ்ணவி திருநங்கை ஆகியோர் நடிக்கிறார்கள். ராய்லட்சுமி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சாய்ரமணி. இப்படம் பற்றி இயக்குனர் சாய்ரமணி கூறுகையில், “இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் ஈகோ யுத்தம் தான் கதை. இரண்டு அதிகாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டதால் அதில் நுழைந்து லாபம் பார்க்க நினைக்கும் சமூக விரோதி ஒருவனின் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா ? என்பது பரபரப்பான திரைக்கதை. ராகவா லாரன்ஸ் இதுவரை ஏற்றிராத போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவருக்கு இன்னொரு பரிணாமத்தை கொடுக்கும். பக்கா கமர்ஷியல் படம் தான் மொட்ட சிவா கெட்ட சிவா” எனறார்.

ஒளிப்பதிவு  – சர்வேஸ் முராரி

வசனம்  – ஜான் மகேந்திரன், சாய்ரமணி

இசை – அம்ரிஷ்.

பாடல்கள் – வைரமுத்து, விவேகா, சாய்ரமணி, சொற்கோ, லோகன்.

கலை – செல்வகுமார்

எடிட்டிங் – பிரவீன்.கே.எல்

ஸ்டண்ட்  – சிறுத்தை கே.கணேஷ்

நடனம் – ராகவா லாரன்ஸ், சிவா லாரன்ஸ், மோகன் கிஷோர்

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி

 

Read previous post:
m8
 ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படப்பிடிப்பில் இயக்குனர் சாய்ரமணி!

பல வெற்றிப் படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம், தற்போது பிரமாண்டமாக தயாரித்துவரும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தின் படப்பிடிப்பில்

Close