கார்க்கியின் ‘தாய்’ நாவலில் இருந்து தொடங்குங்கள்!

மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் தான் என்னைப் போன்றவர்களுக்கு சிவப்பு சொக்காய் மாட்டிவிட்டு, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரிடம் கையைப் பிடித்து அழைத்துப்போய், மார்க்சிய பாடம் கேட்க வைத்த நாவல்.

உள்ளுறையாய் ஒளிந்து இருந்த அறிவுக் கண்ணை அடையாளம் காட்டி, ஓரளவிற்காவது திறக்க வைத்த பெருமை ‘தாயை’யே சேரும் என்றால் அது மிகையல்ல.

“எங்கிருந்து தொடங்குவது?” என்று கேட்கும் இளைஞர்களுக்கு என் ஆலோசனை, ‘தாயி’ல் இருந்து தொடங்குங்கள் என்பது தான்.

அன்னையர் தினப் பதிவு.

GNANABHRATHI CHINNASAMY