ஆளுநராகும் தமிழிசையை வாழ்த்தத் தான் வேண்டுமா?

தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநர் ஆனதுக்கு வாழ்த்தாட்டியும் பரவாயில்ல, ஏன் கலாய்க்குறீங்கன்னு ஒரு சிலர் கேட்குறாங்க…

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அப்போ “1000 பேர் சாக வேண்டியது, நல்ல வேளையாக 13 பேர் மட்டுமே இறந்து இருக்கிறார்கள்…”ன்னு ரொம்ப கேவலமா தமிழக அரசுக்கு முட்டு கொடுத்த ஒருத்தரை…

‘ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம் எல்லாம் வளர்ச்சிக்கான திட்டம்.. எந்த ஆபத்துமே இல்லை’ன்னு பொய் பேசுற ஒருத்தரை…

கூடங்குளத்துல அணுக்கழிவு கொட்டலாம், ஆபத்து இல்லைன்னு சொல்ற ஒருத்தரை..

“நீட் எக்ஸாம் ஒரு கல்வி புரட்சி, ஏழை மாணவர்களுக்கு உதவும்”ன்னு பொய்யா பிரச்சாரம் பண்ற ஒருத்தரை….

போன வருஷம் காவிரி பிரச்சினை தீவிரமா போய்ட்டு இருந்தப்போ, கர்நாடாகாவுக்கு போய் மாநில தேர்தலுக்கு பிரச்சாரம் பண்ண ஒருத்தரை…

ஃபிளைட்ல தன்னை பார்த்து ‘பாஜக ஒழிக’ன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, ஒரு மாணவியை அவமானப்படுத்தி கேஸ் கொடுத்து கேரியரையே கேள்விக்குறி ஆக்குற அளவுக்கு கொண்டுபோன ஒருத்தரை…

சமீபத்துல சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷை தாக்கிய காட்டுமிராண்டியை எல்லாம் அரெஸ்ட் பண்ணனும்ன்னு சொல்றதுக்கு பதிலா, பாதிக்கப்பட்ட பியூஸ் மனுஷை அரெஸ்ட் பண்ணனும்ன்னு சொல்ற ஒருத்தரை….

இவ்ளோ பண்ற ஒருத்தரை எதுக்காக வாழ்த்தணும்…? இதுல சந்தோஷப்பட என்ன இருக்கு?

She is just another political parasite from BJP… பதவியோ, பவரோ கிடைக்கும்ன்னா என்ன வேணாலும் பண்ணக்கூடிய, தன்னோட கட்சி பண்ற எந்த தப்புக்கும் முட்டு குடுக்கக்கூடிய / மக்கள்கிட்ட பொய்யை வாரி இறைக்கக்கூடிய, மக்கள் பிரச்சினை எதுக்குமே குரல் கொடுக்காத ஒரு மோசமான சுயநல அரசியல்வாதி மட்டுமே.

நான் தமிழிசையோட அரசியல் பேச்சுக்களை, நடவடிக்கைகளை கலாய்ச்சு நிறைய போஸ்ட் ஷேர் பண்ணியிருக்கேன்… ஆனா, அவங்களோட உயரம், நிறம், தலைமுடியை வெச்சுலாம் வர்ற எந்த உருவகேலி மீம்களையும் ஷேர் பண்ணதில்லை.

மேலே தமிழிசை பத்தி சொல்லி இருக்குற உதாரணங்கள் எல்லாம் ஒரு சின்ன சாம்பிள்தான் … வாரம் 3 பிரஸ்மீட் வெச்சு இன்னும் நிறைய பேசிட்டுதான் இருக்காங்க.

தமிழிசையை புகழ்றவங்க எல்லாம் தமிழக பிஜேபி’யில இருக்குற எச்.ராஜா, எஸ்.வி.சேகர், பொன்னர் மாதிரி மத்த கேவலமான அரசியல்வாதிகளுக்கு இந்தம்மா எவ்வளவோ பரவாயில்லைன்னு வேணா சொல்லிக்கலாம்…. மத்தபடி, அவங்க innocent’ம் இல்லை, மக்கள் பிரச்சினைகள் மேல துளி கூட அக்கறை கொண்டவங்களும் இல்லை !!

Kalilur Rahman

 

Read previous post:
0a1a
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்: தமிழக தலைவர்கள் வாழ்த்து

2014ஆம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்துவருபவர் தமிழிசை சவுந்திரராஜன். “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்று அவர்

Close