தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்: தமிழக தலைவர்கள் வாழ்த்து

2014ஆம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்துவருபவர் தமிழிசை சவுந்திரராஜன். “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்று அவர் கரடியாக்க் கத்தியபோதிலும், அவரது தலைமையிலான தமிழக பா.ஜ.க. நோட்டாவைக் கூட தோற்கடிக்கத் திராணியில்லாமல் பரிதாபமான நிலையிலேயே இருந்துவருகிறது.

இதனால் தமிழிசையின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு இருந்தபோதிலும், அவரை தலைவர் பதவியிலிருந்து வெளியேற்ற பாஜகவின் அகில இந்திய தலைமை முடிவு செய்தது. இதற்காக அவருக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் பதவி வழங்கி, பதவியுயர்வு கொடுப்பது போல் தோற்றம் காட்டி, அவரை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றியிருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழிசைக்கு மு.க.ஸ்டாலின். கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.