சி.மகேந்திரனின் மகன் நடிக்கும்  ‘முந்திரிக்காடு’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்!  

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’ இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக  கதையின்  முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நாயகனாக புகழ் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மு.களஞ்சியம்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். படத்தின் இயக்குனர் மு.களஞ்சியம், படத்தின் நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன், ஒளிப்பதிவாளர் ஜி.ஏ.சிவசுந்தர், நடிகர் கலைசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

படம் பற்றி இயக்குனர் மு.களஞ்சியம் கூறுகையில், “முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறோம். படம் விரைவில் வெளியாக உள்ளது” என்றார்.

 

Read previous post:
p9
Pakka Movie Stills

Pakka Movie Stills

Close