தனுஷூடன் கைகோர்க்க ஆசைப்படும் பிரபஞ்ச அழகி!

இந்திய சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை ஷீனா சோஹன். தனுஷின் தீவிர ரசிகையான இவர் ஓர் அனுபவம் மிகுந்த நாடக கலைஞர்.

“நான் அனுபம் கேர் பள்ளியில் நடிப்பு பயின்றேன். அப்போதுதான் தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜெயராஜ் மூலம் எனக்கு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது” என்கிறார் நடிகை ஷீனா. மேலும் துபாய், ஷாங்காய் மற்றும் கேரளாவில் நடைப்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வங்காள திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர், கதாநாயகி மட்டுமல்லாது ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்குமாறு இருக்கும் அனைத்து காதாபாத்திரங்களிலும் நடிக்க தயார் என்கிறார். சமகால நடனம் மற்றும் வயலின் இசையில் கைதேர்ந்தவரான இவர் ஒரு தேசிய கராத்தே வீராங்கனை என்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

மேலும், தனுஷின் நடிப்பால் வியந்துப்போய் நிற்கும் ஷீனா, “தனுஷ், தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது, பாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பை பார்த்து நான் பலமுறை வியந்ததுண்டு. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் நுணுக்கம், தனுஷின் திறமை. இந்த காரணத்தினால் தான் அவருடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது” என்கிறார் கொல்கத்தாவின் அழகு புயல் ஷீனா.




Read previous post:
kp3
பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ விழாவில் ஆணவக்கொலை குற்றவாளிகள்!

குற்றப்பரம்பரை என்று ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்த கொடுமையைப் பற்றி பாரதிராஜா படம் எடுக்கிறார். அது அவரது சமூகக் கடமை என்றுகூட சொல்லுவேன். தவறு இல்லை.

Close