‘மீசைய முறுக்கு’ – முன்னோட்டம்!
இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் நாளை (21ஆம் தேதி) உலகெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கியிருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
‘மீசைய முறுக்கு’ படம் பற்றி ஹிப் ஹாப் தமிழா ஆதி கூறுகையில், தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை சொல்லும் கதை இது. குழந்தைகள் திறமைசாலியாக வளர வேண்டும் என்பதற்காகவே பிள்ளைகளை பல்வேறு துறைகளை கற்றுக்கொள்ள பல வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அனுப்புகிறார்கள். அதன் அருமை அப்போது பிள்ளைகளுக்குத் தெரியாது. அவர்கள் வளர்ந்து ஆளாகி, வாழ்க்கையில் சாதிக்கும்போதுதான் தந்தையின் நினைப்பு வரும். அப்பா மீது தனி மரியாதை வரும். அப்பாவை கதாநாயகனாக பார்ப்பார்கள். இதுதான் இந்த படத்தின் கரு” என்றார்.
இதில், கல்லூரி மாணவியாக நாயகி ஆத்மிகா நடித்து இருக்கிறார். மற்றும் மா.கா.பா.ஆனந்த், விஜயலட்சுமி, மாளவிகா, ஸாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்து இருக்கிறார்.