விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘மதுர வீரன்’: படப்பிடிப்பு துவங்கியது!

வி ஸ்டூடியோஸ் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘மதுர வீரன்’. இதில் கதாநாயகனாக விஜயகாந்த் மகன்  சண்முகபாண்டியன் நடிக்கிறார்.

விஜயகாந்த் முன்னிலையில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்து வைக்க, இப்படத்தின் படப்பிடிப்பு  இன்று சென்னையில் துவங்கியது.

இத்துவக்க நிகழ்ச்சியில்  எல்.கே.சுதீஷ் மற்றும் இப்படத்தில் நடிக்கும்  சமுத்திரகனி, மொட்டை ராஜேந்திரன் பாலசரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சென்னையில் 15 நாட்கள் தொடர்ந்து படபிடிப்பு  நடைபெற உள்ளது.  இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் பிஜி. முத்தையா. தயாரிப்பு விஜி சுப்பிரமணியம்.

 

Read previous post:
0
விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு!

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 25ஆம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக

Close