தருண் விஜய் வருகைக்கு எதிர்ப்பு: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் பா.ஜ.க முன்னாள் எம்.பி தருண் விஜய். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்துக்கு மதச்சாயம் பூச தருண் விஜய் முயல்வதாக குற்றம் சாட்டிய மாணவர்கள், அவர் உடனே வெளியேற வற்புறுத்தி முழக்கமிட்டனர்.

இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டதால், தருண் விஜய் வேறு வழியாக நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் காவல்துறை விரைந்து வந்து மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறியது. அதனை ஏற்க மறுத்து மாணவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் பல்கலை வளாகத்துக்குள்ளேயே மாணவர்களை கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றது காவல்துறை.

Read previous post:
0
அராஜக கமிஷனர் ஜார்ஜ் டிஜிபி ஆகிறார்!

வெகுமக்களுக்கு எதிரான அராஜக நடவடிக்கைகளுக்கு பேர் போன சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Close