தமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி

பிரபல நடிகர் சத்யராஜ் மகளும், ஊட்டசத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் ’அட்சய பாத்திரா’ அமைப்பின் விளம்பர தூதராக உள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:

‘அட்சய பாத்திரா’ அமைப்பு உலகப் புகழ்பெற்ற மதிய உணவு திட்டம் ஆகும். இதற்கு ஏற்கனவே சென்னை நகருக்கு வெளியே ஒரு உணவு தயாரிப்பு கூடம் உள்ளது.

நகருக்குள் ஒரு உணவு தயாரிப்பு கூடம் இருந்தால் வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதை ஒரு கோரிக்கையாக வைத்தேன். அவரும் முதல் அமைச்சரிடம் கோரிக்கையை சேர்ப்பதாக கூறினார்.

முதல்வருக்கும் கோரிக்கை அனுப்பினோம். குழந்தைகளின் உடல்நலத்திற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் அவர் இதற்கு அனுமதி அளித்ததுடன் இடமும் வழங்கி அடிக்கல் நாட்டி இருக்கிறார். இதற்காக தமிழக அரசுக்கும் முதல் அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’.

இவ்வாறு அவர் கூறினார்.

Read previous post:
0a1a
சென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு!”

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- மத்திய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும்

Close