“சில சூதுகளின் கூர்மையான முனைகளில் சிக்கி ஜக்கி அழிவான்!”

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சவுக்கு சங்கர் இந்த ஜக்கியை பற்றி எழுதினார். அதற்கு பிறகே மக்கள் அவனை பற்றி பேச, விசாரிக்க, கண்டிக்க தொடங்கினர். இரண்டு வருடம் கழித்து இப்போது மோடியை கூப்பிட்டதால் மக்களிடம் மாட்டிக் கொண்டான்.

அவனை பற்றி சொல்ல ஆயிரம் விஷயங்கள் உண்டு. அதில் முக்கியமானது அவனை தேடி ஏன் மக்கள் போகிறார்கள் என்பது.

சேலம் ஏற்காட்டில் ஒரு தொழிலதிபர் குரூப்பு ஒரு போலி சாமியாரை உருவாக்கி உக்கார வைத்தது. ஆசிரமம் கட்டியது. அவ்வப்போது போய் சிரம பரிகாரம் செய்துகொண்டது. பின்னர் வளர்ந்து இன்று அது அரசியல் கிடங்காக மாறி, அவன் இன்று ஒரு மத்திய அமைச்சரின் கறுப்பு பணத்தை தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு விடும் வேலையை பெங்களூரில் இருந்து செய்கிறான்.

அவனைப் போலவே உள்ளூரிலும் ஒரு ஆன்மீக-அஜால்-குஜால்-முதலீடு-முக்தி பிசினஸ் பண்ண வெகுநாளாக யோசித்து வந்த கோவை வாழ் துருப்பிடித்த பிசினஸ் காந்தங்கள், சரியான ஆளை தேடிக்கொண்டு இருந்தபோது சிக்கியவன் தான் இந்த வாசுதேவன் என்ற திருட்டு யோகா மாஸ்டர்.

அவனை வளர்த்துவிட்டு, பின்னால் தப்பு பண்ணிவிட்டோமோ என்று புலம்பிய தொழில் காந்தங்கள் நிறைய.

அவன் சாதாரண ஆள் இல்லை இப்போது. சர்வதேச அளவில் தொடர்புகளை ஏற்படுத்தி தைரியமாக செயல்பட தொடங்கி விட்டான். மிகப் பெரிய ஒரு மாபியா கும்பலின் சங்கிலியில் உள்ளான். இன்னும் சில வருடங்களில் அவன் அழிவான்.

அதுவரை பொண்டாட்டி, பொம்பளை பிள்ளைகளை கூட்டிட்டு அந்த பக்கம் போகாதீங்க.

மத்தபடி மக்களால் அவனை ஒன்றும் செய்ய முடியாது.

சில சூதுகளின் கூர்மையான முனைகளில் சிக்கி அவனே அழிவான். அவன் அழியும்போது கோவையில் பல டுபாக்கூர் தொழில் காந்தங்களும் தற்கொலை செய்துகொள்ளும்.

உலக அளவில் முதலீடு, வணிகம் எல்லாம் இப்படியான ஆன்மீக கட்டபஞ்சாயத்து ரவுடிகளின் மேற்பார்வையில் தான் நடக்கிறது. யூதனுக்கும் உண்டு. பார்ப்பானுக்கும் உண்டு. பனியாவுக்கும் உண்டு. சூத்திரனுக்கும் உண்டு. பஞ்சமனுக்கும் உண்டு.

மோடி வரும்போதே தெரியவில்லையா… அவன் செத்த பாம்பு என்று.

வாங்க, நெடுவாசல் எரிவாயு எமனுக்கு எதிராக போராடுவோம்!

SRINIVASA RAGHAVAN

 # # #

சத்குரு என்ற பித்தலாட்ட நில மோசடி சாமியாரின் சிலையை அவரது பக்தகோடிகளே ஒருநாள் உடைத்து, சட்டையை கழற்றி ஓட விடுவார்கள்…

அதற்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

இங்கே எதெற்கெடுத்தாலும் கிராமப்புற மனிதர்களே பாமரர்களாக சித்தரிக்கப்பட்டுவந்த நிலையில், மெத்தப் படித்தும் மூளை மழுங்கிய நிலையில் செயல்படும் பணம் படைத்த பாமரக் கூட்டத்திற்கு விழிப்புணர்வை உண்டாக்கக் கூடிய கருத்துகளை வெளியிட்டபடியே இருக்க வேண்டும்…

இல்லையெனில், சமூக அவலங்களை பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாதபடி, மழுங்கடிக்கப்பட்ட ஒரு கூட்டத்தை அப்படியே இருக்கும்படி செய்த வரலாற்றுப் பிழையை செய்தவர்கள் ஆவோம்…

மு.ரா.பேரறிவாளன்