மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பிரபல பின்னணிப்பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73.

மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பிரபல திரைப்பட பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தலைவர் கலைஞர் மீதும், என் மீதும் அளவற்ற அன்பை பொழிந்து, பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இன்று (27-12-2021) காலையில் திருவான்மியூரில் வைக்கப்பட்டிருக்கும் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

0a1f