லைகா தயாரிக்கும் படத்தில் உதயநிதி – மஞ்சிமா: படப்பிடிப்பு துவங்கியது!

‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ ஆகிய  படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை எழுதி இயக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது என்பதால், பெயரிடப்படாத இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ் 9’ என அழைக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு, வியாழனன்று பூஜையுடன் துவங்கியது.

0a1h

‘சிகரம் தொடு’ படத்திற்குப்பின் இசையமைப்பாளர் டி.இமான், கௌரவ் நாராயணனுடன் இதில் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறார். ‘டிமான்டி காலனி’யில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கலை – விதேஷ்

படத்தொகுப்பு – கே.எல்.பிரவீன்

சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன்

ஊடகத்தொடர்பு – நிகில்

நிர்வாக தயாரிப்பு – எஸ்.பிரேம்

இப்படத்தின் இதர நடிகர் – நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Read previous post:
0a1o
‘கிடாரி’ வெற்றி தந்த ஊக்கம்: புது படம் தொடங்கினார் எம்.சசிகுமார்!

எம்.சசிகுமார் தனது ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த கிடாரி’ படத்தின் வெற்றியை அடுத்து, மீண்டும் புதிய படம் ஒன்றை தயாரித்து நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை

Close