‘கிடாரி’ வெற்றி தந்த ஊக்கம்: புது படம் தொடங்கினார் எம்.சசிகுமார்!

எம்.சசிகுமார் தனது ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த கிடாரி’ படத்தின் வெற்றியை அடுத்து, மீண்டும் புதிய படம் ஒன்றை தயாரித்து நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ் 9’ என அழைக்கிறது படக்குழு.

இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பி.பிரகாஷ், இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். நாயகன் எம்.சசிகுமாருடன் முக்கிய கதாபாத்திரங்களில் சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்பட உள்ள இப்படத்தின் பூஜை, வியாழனன்று நடைபெற்றது. எம்.சசிகுமார், சங்கிலி முருகன், கோவை சரளா உள்ளிட்ட படக்குழுவினர் இப்பூஜையில் கலந்துகொண்டனர்.

0a1l

தர்புகா சிவா இசையமைக்க, ‘ஐவராட்டம்’, ‘உறுமீன்’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவிந்திரநாத் குரு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கலை இயக்கம் – மாயபாண்டி

படத்தொகுப்பு – பிரவின் ஆண்டனி

ஊடகத் தொடர்பு – நிகில்

இணை தயாரிப்பு – பி.அசோக்குமார்

இதர நடிகர் – நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.