தமிழின துரோகி கருணா கைது: சிறையில் அடைப்பு!

இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 7-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அரசு வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியது, வாகனம் வாங்கியதில் நிதி முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகளின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 7-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்கிற விநாயகமூர்த்தி. பின்னர் தமிழின துரோகியாக மாறி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து அரசியலில் நுழைந்தார்.

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச ஆட்சியின்போது அவரது அரசில் ஒருமைப்பாடு, கலாச்சார துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபராகப் பதவியேற்றார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மஹிந்த ராஜபக்ச, அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.