“எனது ஓம் பூரி மறையவில்லை”: கமல்ஹாசன் ட்வீட்

நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் நடிகர் ஓம் பூரி. கமல்ஹாசனின் ‘ஹே ராம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘சாச்சி 420’ போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

அவருடைய மறைவு குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது:

“இத்தனை ஆண்டுகாலமும் ஓம் பூரி எனது நண்பர் என்பதில் பெருமிதம் கொண்டிருந்தேன். எனது ஓம் பூரி மறைந்துவிட்டார் எனக் கூறும் துணிச்சல் யாருக்கு எப்படி வந்தது? அவர் என்றும் நிலைத்திருப்பார் அவருடைய படைப்புகள் வாயிலாக.”

கமல்ஹாசனின் ஆங்கில ட்விட்:

“So long Omji. Prided myself on being his friend peer & admirer. Who dare say my  Om Puri is no more? He  lives through his work”