“ஆம், நான் தமிழ் பொறுக்கி தான்”: சு.சுவாமிக்கு கமல்ஹாசன் பதிலடி!

சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை “தமிழ் பொறுக்கிகள்” என்று அநாகரிகமாக குறிப்பிட்டிருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நியமன எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி.

இதற்கு பதிலடிக்கும் வகையில், தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். “யாரோ ஒருவர் தமிழ் பொறுக்கிகள் என்று சொல்லியிருக்கிறார். ஆம், நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கி தான். எங்கே பொறுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். இங்கு தான் பொறுக்குவேன். டெல்லிக்கு எல்லாம் சென்று நான் பொறுக்க மாட்டேன். திடீரென்று அரசியல் பேசுகிறேன் என நினைக்காதீர்கள். நான் பேசுவது அரசியல் அல்ல, தன்மானம்” என்றார் கமல்ஹாசன்.

 

 

Read previous post:
0a1c
“குழப்பம் ஏற்படுத்தும் ஹிப் ஹாப் ஆதி”: சமுத்திரக்கனி கண்டனம்!

“ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது” என்று இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து

Close